பெண் உதவியுடன் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்.. கட்டிப்போட்டு தப்பியோடிய காமுகன்கள்.!15 years up girl raped by 2 men in paroli

சிறுமி மாயம் :
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பாக ஒரு 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், டிராக்டர் தள்ளுவண்டிக்கு அடியில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டது. 

Uttar pradesh
கூட்டு பலாத்காரம் :
இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமி இரு நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

உடந்தையாக இருந்த பெண் :
இது பற்றி சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும், அந்த புகாரில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொலைபேசியில் எங்கள் மகளை பேச வைத்துள்ளார் என்று தெரிவித்து இருக்கின்றனர். இதன் பேரில் போலீசார், "செல்போனில் சிறுமியிடம் மறுமுனையில் பேசிய அந்த நபரும், மற்றொரு நபரும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கின்றனர். 

இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி.. தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை.. அரக்கனின் அதிர்ச்சி செயல்.!

Uttar pradesh
போலீசார் தீவிரம் :
இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அவரை கை, கால்களை கட்டி டிராக்டர் வண்டிக்கு அடியில் வைத்துவிட்டு தப்பியோடி இருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து, சிறுமியை செல்போனில் பேச வைத்த பெண் மற்றும் அந்த குற்றவாளிகள் இருவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் அவர்களை தேடி வருகிறோம்." என்று போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த 15 வயது சிறுமி தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார்.

இதையும் படிங்க: கொள்ளை சம்பவத்தில் தொழிலதிபர் மரணம்; குற்றவாளியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.!