"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
கொடூரத்தின் உச்சம்... கார் ஏற்றி 15 வயது சிறுவன் படுகொலை... உறவினர் தலைமறைவு.!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக இறந்த மாணவனின் தூரத்து உறவினரை காவல்துறை தேடி வருகிறது.
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் தீபா தம்பதியினரின் 15 வயது மகனான ஆதிசேகர் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வீட்டின் முன்பு கார் மோதி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் கொலை என உறுதியானது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் கொலையாளி இறந்த மாணவரின் தூரத்து உறவினரான பிரியராஞ்ஜன் என கண்டுபிடித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளில் பிரியா ரஞ்சன் மாணவன் மீது வேகமாக கார் ஏற்றி கொன்று விட்டு செல்வது பதிவாகி இருந்தது .
மேலும் தலைமறைவாக இருக்கும் கொலையாளி பிரியாரஞ்சனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோவில் வளாகத்தில் சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஏற்பட்ட முன் விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பதாக இறந்த சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.