படித்து முடிப்பதற்கு முன்பே மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்! 1.45 கோடி சம்பளம்!

1.45 crore salary for iit student


145-crore-salary-for-iit-student

டெல்லி ஐஐடி மாணவி ஒருவருக்கு ரூ1.45 கோடி ஆண்டு வருமானத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணி கிடைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவி இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.

டெல்லி ஐஐடியில் கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் படித்து வரும் மாணவி ஒருவர் சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொண்டார். அப்போது மாணவி அளித்த பதில் திருபதிகரமாக இருந்ததால், பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று அவரை வேலைக்கு எடுக்க முடிவு செய்து, ஆப்பர் லெட்டரை கொடுத்துள்ளது.

delhi

அதில் அவருக்கும் வருடத்திற்கு சம்பளம் 1.45 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது. கல்லூரி படிப்பை முடித்தவுடன் குறித்த மாணவி விரைவில் பணிக்கு சேரவுள்ளார். இந்த தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவர்களிலேயே இதுவரை இவருக்குத் தான் அதிக சம்பளத்தில் பணி ஒப்பந்தம் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த மாணவி மட்டுமின்றி, இவருடன் படித்த இரண்டு மாணவர்களை ஆண்டுக்கு ரூபாய் 45 லட்சம் மற்றும் ரூபாய் 43 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், அடோப், குவால்காம், டவர் ரிசர்ச், கோல்ட் சாக், ரிலையன்ஸ், சாம்சங் ஆகிய நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.