திருமண நிகழ்வில் நடந்த சோகம்.! 14 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.! இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி.!
திருமண நிகழ்வில் நடந்த சோகம்.! 14 பேர் துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்.! இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி.!

உத்தரகண்ட் மாநிலம் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் சம்பாவத் மாவட்டம் தனக்பூரில், திருமண விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வாகனத்தில் சொந்த ஊர் புறப்பட்டனர். அப்போது நேற்று அதிகாலை சம்பவத் மாவட்டம் அருகே உள்ள, சுக்கிதங்க் மலை பகுதியில் அவர்கள் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் விழுந்தது.
அந்த வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்தபோது முன்னும், பின்னும் வாகனங்கள் இல்லாததால், விபத்து குறித்து ஒருவருக்கும் தெரியாமல் போனது. இந்தநிலையில், நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு நடந்த விபத்தில், வாகனத்தில் இருந்த 14 பேர் பலியான தாக போலீசார் தெரிவித்தனர். அங்கு நடந்த விபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் மோடி, பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பலியானவர்களின் குடும்பத்திற்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.