வீடியோ: கோவில் திருவிழாவில் விபத்து.!! திடீரென கவிழ்ந்த 120 அடி உயர தேர்.!! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்.!!120-feet-chariot-roll-over-in-temple-festival-near-beng

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள கோவில் திருவிழாவின் போது 120 அடி உயர தேர் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

karnatakaகர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள ஹஸ்கூர் என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரம்மா திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் நடைபெற்ற திருவிழாவின் போது 120 அடி உயரம் உடைய பிரம்மாண்டமான தேர் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தேர் ஊர்வலமாக வந்தபோது சாலை முழுவதும் அதிக கற்கள் மற்றும் மணல் இருந்ததால் தேர் கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக ஹஸ்கூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.