சளி, இருமல், காய்ச்சல் தொல்லையில் இருந்து நீங்க துளசி சாதம்; செய்வது எப்படி?..! 

சளி, இருமல், காய்ச்சல் தொல்லையில் இருந்து நீங்க துளசி சாதம்; செய்வது எப்படி?..! 



Thulasi Satham Preparation Tamil 

 

நமது வீடுகளில் பூஜை அறையில் முக்கிய பொருளாக இருக்கும் துளசியை நாம் சாப்பிடுவது சளி, இருமல் போன்ற தொல்லையை நீங்க உதவி செய்யும் என்பது பலருக்கும் அறிந்த ஒன்று. 

சிறு குழந்தைகளிடம் இதனை கொடுத்தால் அவர்கள் பெரும்பாலும் துளசி சாப்பிடுவதை விரும்புவதில்லை. அவர்களை சாப்பிட வைக்க, துளசியை வித்தியாசமாக சாதமாக நாம் செய்து வழங்கலாம். இன்று துளசி சாதம் செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள்: 

துளசி - அரைக் கிண்ணம், 
சாதம் - ஒரு கிண்ணம், 
கடலைப்பருப்பு - ஒரு சிறிய கரண்டி, 
உளுந்தம் பருப்பு - ஒரு கரண்டி, 
கடுகு, கருவேப்பிலை - தேவையான அளவு, 
கொத்தமல்லித்தழை - சிறிதளவு, 
பச்சை மிளகாய் - இரண்டு, 
வெங்காயம் - ஒன்று, 
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட துளசி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து உளுந்தம் பருப்பு, தேங்காய் பருப்பு ஆகியவற்றை இட்டு வதக்க வேண்டும். 

பின் வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, துளசி இலையை தேவையான அளவு சேர்த்து உப்பு போட்டு ஐந்து நிமிடம் வரை வதக்க வேண்டும். 

பின் இந்த கலவையை சாதத்துடன் சேர்த்து கிளறி சாப்பிட்டால் சுவையான துளசி சாதம் தயார். குழந்தைகளுக்கும் இவ்வகையாக சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.