தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
அப்படியே அச்சு அசலாக அப்பாவை போலவே இருக்கும் ரோஹித் சர்மாவின் குழந்தை!! வைரலாகும் கியூட் வீடியோ.!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோகித்சர்மா. இவர் ரித்திகா என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ரோகித்சர்மா தான் விளையாட செல்லும் பல இடங்களுக்கும் தனது மனைவியுடனேயே சேர்ந்து சென்று வந்தார். எனவே பெரும்பாலான போட்டிகளில் ரோஹித் ஷர்மாவின் மனைவியை காணமுடிந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தொடர்களை விளையாடிய இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வெற்றி பெற்ற கொண்டாட்டத்தில் இருந்தபோது, ரோகித் சர்மாவுக்கு, அழகான பெண்குழந்தை பிறந்துள்ளதாக மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது.
அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு ரோகித்சர்மா தனது குழந்தையின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, குழந்தையின் பெயர் 'சமைரா' என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா, தன்னுடைய மகள் சமைரா சிரிக்கும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.