கண்களில் கருவளையம் உள்ளதா? கவலை வேண்டாம்.. இதை மட்டும் செய்யுங்கள்.!remedies-for-eye-dark-circle

கருவளையம் வர காரணம் :
கண்களில் கருவளையம் வருவதற்கு முக்கிய காரணமே நமது கண்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்படாத ஓய்வு தான். கண்களை யாரும் முறையாக பராமரிப்பது இல்லை. சரியான நேரத்தில் தூங்காமல் செல்போன் உபயோகித்துக் கொண்டு கண்களுக்கு அதிகப்படியான வேலை கொடுப்பது மற்றும் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட வகை தான் கருவளையம் வர முக்கிய காரணமே. 

வீட்டு வைத்தியம் :
கண்களில் கருவளையம் ஏற்பட்டாலே முகத்தில் முதுமை சுருக்கங்கள் உள்ளிட்டவை தோன்றி முக அழகை கெடுத்து விடும். மருத்துவர்களிடம் காண்பித்து இதற்கு சரியான ஆலோசனை செய்து கொள்வது நல்லது. இப்போது, வீட்டிலேயே சில பொருட்களை வைத்து உடல் சோர்வால் ஏற்படும் கருவளையத்தை போக்குவது எப்படி என பார்க்கலாம். 

Remidies

கண்களுக்கு ஓய்வு :
நன்றாக முதலில் தூங்க வேண்டும். மேலும், கணினி செல்போன் தொலைக்காட்சியை உள்ளிட்டவற்றை அதிக நேரம் பயன்படுத்தாமல் இடைவெளி விட்டு கண்களுக்கு ஓய்வு கொடுத்து அதன் பின் பயன்படுத்துவது நல்லது. விட்டமின் ஈ மாத்திரை மற்றும் பாதாம் எண்ணையை ஒன்றாக கலந்து கண்களுக்கு பேக் போடுவது நல்லது. 

ஆயில் மசாஜ் :
இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக முகத்தை நன்றாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த எண்ணையை போட்டு, நன்றாக மசாஜ் செய்து ஐந்து நிமிடங்கள் கழித்து முகத்தை துடைத்து விட வேண்டும். 

Remidies

குறிப்பு :
இதை பெரும்பாலும் இரவு நேரங்களில் மேற்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். ஏனெனில், இதை செய்தவுடன் நமக்கு நன்றாக தூக்கம் வரும். இந்த தூக்கம் கலைந்து காலையில் பார்க்கும்போது நாம் மிகவும் புத்துணர்ச்சியாக காணப்படுவோம்.