
pirandai cures knee pain
நமது பாரம்பரிய உணவு பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அதனை இப்பொழுது நாம் பயன்படுத்துவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அந்த பொருட்கள் கிடைப்பது மிகவும் அரிதாகிவிட்டது. அவ்வாறு கிடைத்தாலும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதும் நமக்கு தெரிவதில்லை.
இப்படி ஒரு சிறந்த மருத்துவ குணமுள்ள பொருளைப் பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். நம்மில் பலருக்கு குறைந்த வயதிலேயே முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனை சரிசெய்ய நாம் மருத்துவர்களை அணுகி பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும் முழுமையாக குணமடைவதில்லை. நமது பணம் தான் விரையம் ஆகிக் கொண்டிருக்கும்.
இத்தகைய இன்னல்களிலிருந்து விடுபட நமக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது இந்த பிரண்டை. பிரண்டையில் உள்ள சுண்ணாம்பு சத்தானது நமது எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க உதவுகிறது. இதில் இருக்கும் கால்சியம் நமது எலும்புகளை மிகவும் வலிமை ஆக்குகிறது.
மேலும் நமது உடலில் மேலிருந்து கீழ் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த பிரண்டை நமது சிறு குடலில் ஏற்படும் குறைபாடுகளை குணமாக்கும் சக்தி பெற்றுள்ளது.
பிரண்டையை உப்புடன் சேர்த்து சுமார் 300 மில்லி கிராம் தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது.
சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.
முழங்கால் வலி,மூட்டு வலி நீங்க பிரண்டை துவையல் செய்து சாப்பிடுங்கள்..கால் வலியை போக்க பிரண்டை, மல்லிதலை, தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் சோர்வும் இருக்காது.
இத்தகைய பிரண்டை பொதுவாக கிராமங்களில் முட்புதர்களிலும், கள்ளிச் செடிகளில் தானாகவே வளரக்கூடியவை. ஆனால் நவீனமயமாக்கல் என்ற பெயரில் இவைகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவருகின்றன. இத்தகைய மருத்துவ குணமுள்ள பிரண்டையை நாம் நமது வீடுகளில் தொட்டிகளில் வைத்து கூட வளர்க்க முடியும்.
இனிவரும் காலங்களிலாவது இவைகளை வளர்த்து நாமும் பயன்பெற்று நமக்கு அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் இதனை சொல்லிக் கொடுப்போம்.
Advertisement
Advertisement