தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
PCOS பிரச்சனையை சரி செய்ய கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதுதான்.!
இன்றுள்ள பல பெண்களும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற PCOS கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தாய்மை அடைவதில் சிரமம், முறையற்ற மாதவிடாய், அதிக உதிரப்போக்கு, உடல் பருமன் அதிகரிப்பது மற்றும் மன அழுத்தம் போன்ற பாதிப்பும் ஏற்படுகின்றன.
இந்த PCOS பிரச்சனையானது பருவ வயதுள்ள பெண்கள் முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது. இந்த PCOS கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வாழ்வியல் மாற்றம் காரணமாக ஏற்படுகிறது.
PCOS கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை மரபு வழியாகவும், மாறுபட்ட வழக்கம், உணவுமுறை மற்றும் உடல் பருமன் போன்ற காரணத்தினாலும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கான முதல் அறிகுறியாக ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் உரோமம் வளர்வது, உடல் எடை அதிகரிப்பது, முடி உதிர்வு போன்றவை தென்படுகிறது.
ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி, சீரான உறக்கம், நேர்மையான வாழ்வியல் மாற்றம் மூலமாக PCOS பிரச்னையை கட்டுப்படுத்த இயலும். அதனைப்போல நார்ச்சத்து நிறைந்த கோதுமை, பச்சை கேரட், கடலை பட்டாணி, முழு தானியம், பீன்ஸ், காலிப்ளவர், பயிறு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். இவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
புரதசத்து அதிகம் உள்ள கோழி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு, சர்க்கரைவள்ளி கிழங்கு போன்றவையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் தக்காளி, மஞ்சள், வால்நட் போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். கறிவேப்பில்லை சட்னி, எள்ளு சட்னி, பீட்ரூட் சட்னி போன்றவற்றையும் வாரத்தின் இரண்டு வேலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியது :
காபி, சோயா, உருளைக்கிழங்கு மற்றும் பால் பொருட்கள், மாவுசத்து நிறைந்த உணவு, மைதா போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட கூடாது.
தினம் குறைந்தது அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்தல், நடைப்பயிற்சி மேற்கொள்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.