அடேங்கப்பா.. காலையில் நடைப்பயிற்சி செய்வதால் இவ்வுளவு நன்மைகளா?.. தெரிஞ்சுக்கோங்க மக்களே.!



morning-time-walking-benefits-tamil

தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் & மன ரீதியாக பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. உடலநலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் சரியாகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. உடல் தொடர்ந்த இயக்கத்தில் இருப்பதால், உடலின் செல்கள் அதிக ஆற்றல் உற்பத்தியை பெறுகிறது. இதனால் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. 

பூங்காவில் அல்லது தெருவில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் நடக்க வேண்டும். உறக்கம் வராமல் தவிர்க்க 10 நிமிடம் பக்கத்தில் நடக்கலாம். தொடர் வேலையை விட்டுவிட்டு சிறிது நடந்து கொடுக்கலாம். இதனால் வேலையினால் ஏற்படும் மனசோர்வு நீங்கும். காலையில் நடப்பதால் ஆரோக்கியத்துடன் மனநிலையும் மேம்படும். காலையில் நடப்பது உடல் உறுப்புகளை மேம்படுத்துகிறது.

நாம் தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடல் உறுப்புக்கள் சீராக வேலை செய்கிறது. உடலின் ஹார்மோன்கள் சீராக இயங்குகிறது. நேர்மையான மனநிலை, சுயமரியாதை மேம்பாடு, பதற்றம் குறைதல், மனசோர்வு குறைதல், மனநல பிரச்சனை சரியாகுதல் போன்ற நன்மை கிடைக்கிறது. குறைந்தது காலையில் 20 நிமிடம் நடந்தால் போதுமானது. 

health tips

நடைபயிற்சியால் சாதாரண நோய்கள் மட்டுமல்லாது இதயம் சார்ந்த பிரச்னையும் ஏற்படாது. காலை நடைப்பயிற்சி கலோரியை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவி செய்யும். காலை நேரத்தில் வயிறு காலியாக இருப்பதால் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படும். வைரஸ், பாக்டீரியா தொற்றில் இருந்து உடல்நலம் பாதுகாக்கப்படும். 

தினமும் 30 நிமி நடந்தால் நீரிழிவு நோய், இரத்த சர்க்கரை போன்றவை கட்டுப்படுத்தப்படும். புற்றுநோய் அபாயம் குறையும். தசைகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மாலை நேர உடற்பயிற்சியை விட காலை நேர உடற்பயிற்சி சாலச்சிறந்தது.