மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
ஆண்களுக்கு அபார சக்தி தரும்.. கருவாடு.! குழந்தையின்மையை தீர்க்கும் அற்புதம்.!

ஆண்மை குறைபாடு
சமீப காலமாகவே ஆண்மை குறைபாடு பெருகி வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக குழந்தையின்மை அதிகரித்து வருகின்றது. வெளிப்படையாக இது பேசப்படவில்லை என்றாலும் மறைமுகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
மாசி கருவாடு :
அந்த வகையில் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க கூடிய கருவாடு பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடலில் இருந்து பிடிக்கப்படுகின்ற கானாங்கெளுத்தி என்று அழைக்கப்படும் சூறை மீன்கள் தான் மாசி கருவாடாக மாற்றப்படுகிறது.
புதுமண தம்பதிகளுக்கு
பொதுவாக புதிய தம்பதிகளுக்கு இந்த மாசி கருவாடு உணவாக கொடுக்கப்படுகிறது. ஆனால், சமீப காலமாக இந்த பழக்கங்கள் மறைந்து விட்டன. இது ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அதிகம் சாப்பிட வேண்டிய ஒரு உணவாகும். இந்த மாசி கருவாடை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு சினைப்பை மற்றும் கருப்பை பலப்படுகிறது.
விந்தணுக்களை அதிகரிக்கும்
மேலும் உடலில் இருக்கும் வாதம், பித்தம், கபம் உள்ளிட்டவற்றை இது சரிசமமாக மேம்படுத்துகிறது. மேலும், ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை இது பலப்படுத்துகிறது. ஆரோக்கியமான உயிரணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது இந்த மாசி கருவாடு என்று கூறப்படுகிறது.