அச்சச்சோ.. முத்தம் கொடுப்பதால் இவ்வுளவு நோய்கள் கூட ஏற்படுமா?.. லிப்-லாக் பிரியர்களுக்கு ஷாக் செய்தி..! 

அச்சச்சோ.. முத்தம் கொடுப்பதால் இவ்வுளவு நோய்கள் கூட ஏற்படுமா?.. லிப்-லாக் பிரியர்களுக்கு ஷாக் செய்தி..! 



lip-lock-caution-tamil

 

சீனாவை சார்ந்த இளம் காதல் ஜோடி, சமீபத்தில் தங்களின் காதல் அன்பை வெளிப்படுத்தும் பொருட்டு 10 நிமிடம் முத்தம் பதித்துக்கொண்ட நிலையில், சுமார் பத்து நிமிடம் நிலவிய முத்தத்தின் காரணமாக இளைஞருக்கு காது தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இது காதல் ஜோடிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முத்தத்தால் இன்று வரை உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சுற்றிக் கொண்டிருந்த பலருக்கும், அதன் விளைவுகள் குறித்த விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், முத்தத்தால் பால்வினை நோய்கள் கூட பரவும்.

liplock

காதல் ஜோடிகள் தங்களின் அன்பை மௌனமாக பரிமாறுவதே முத்தமாக கருதப்படுகிறது. காதல் ஜோடிகளின் பெரும்பாலானோர் லிப்-லாக்கை விரும்புவார்கள். சிலர் நெற்றி, கன்னத்தின் மீதான முத்தத்தை பரிமாறுவார்கள். முத்தம் கொடுப்பதால் நரம்பு மண்டலத்தில் மாற்றங்கள் நிகழும். இதில் நன்மை இருந்தாலும், தீமை குவிந்து கிடக்கின்றன. 

ஆணோ - பெண்ணோ தங்களின் துணைக்கு ஆசையாக முத்தம் கொடுக்குமுன், நாம் வாயை சுத்தமாக வைத்துள்ளோமா? என்பதை ஒருமுறை நினைவில் கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற உடலுறவினால் பால்வினை நோய்கள் பரவும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அதேபோல, பாதுகாப்பற்ற முத்தம் சில நேரங்களில் சிலிபிஸ் என்ற பாக்டீரியா தொற்றினை உண்டாக்கும். 

liplock

இவ்வகை தொற்று முத்தத்தினால் பரவாது எனினும், வாய்வழி உடலுறவை விரும்பும் தம்பதிகளுக்கு இது எச்சரிக்கை வாசமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவ்வகை தொற்று வாய்வழி உறவில் பரவுகிறது. இதனால் வாயில் புண்கள் ஏற்படும். பின் தம்பதிகள் முத்தம் பரிமாறிக்கொண்டு பாக்டீரியாவையும் பரிமாறி கொள்கின்றனர். 

சைட்டோமெகாலோ வைரஸ் உமிழ்நீருடன் தொடர்புகொள்வதால் ஏற்படும் வைரஸ் நோய் ஆகும். இது பாலியல் ரீதியாக பரவும். பெரும்பாலும் வாய்வழி மற்றும் பிறப்புறுப்பு தொடர்பின் மூலமாக பரவுகிறது. இன்புளுயன்சா, காய்ச்சல், சளி போன்ற தொல்லைகள் இருக்கும் துணையை முத்தமிடுவதாலும் முத்தம் சார்ந்த நோய்கள் ஏற்படும். அதேபோல சரும மற்றும் உரோம பிரச்சனை, வாயில் கொப்புளம், தொண்டை பகுதியில் புண்கள் போன்றவை ஏற்படும். 

காதலில் முத்தமே கூடாதா? என கேட்டால் அது உங்களின் விருப்பம். பாதுகாப்பாக இருப்பதே சாலச்சிறந்தது. கட்டாயம் முத்தம் கொடுத்தாகவேண்டும் என்ற நிலையில், இருவரும் வாயை சுத்தம் செய்து முத்தத்தை பரிமாறுவது நல்லது.