கிளாசிக்காயில் நிறைந்துள்ள அசத்தல் நன்மைகள்.. லிஸ்ட் இதோ..! இனிப்பு-புளிப்புடன் ஜமாயுங்கள்.!
தென்னிந்தியாவில் களாக்காய், கிளாச்சிக்காய் என்ற பெயர்கொண்ட புளிப்பு, இனிப்பு, அமிலத்தன்மை கொண்ட பழம், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகம் வளருகிறது.
ஆண்டில் ஆகஸ்ட் - அக் மாதத்தில் கிளாச்சிக்காய் அதிகம் கிடைக்கும். இதில் வைட்டமின் சி, பி, இரும்புசத்து, நார்சத்து, பொட்டாசியம் உட்பட பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
கிளாசிக்காயை அரைத்து முகத்தில் மாஸ்க் போல போட்டுவந்தால், சருமத்தின் நிறமிழப்பு குறையும். கருந்திட்டு பிரச்சனையை நீக்கி, முதிர்ச்சியை தடுக்கும். இதன் நீர்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும். வெப்பநிலையை சமநிலை செய்யும்.
உடலுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகை செய்யும். உள்ளுறுப்புகளுக்கு சத்துக்கள் வழங்க உதவும். கிளாசிக்காயின் புரதம் தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதோடு, கூந்தல் ஆரோக்கியமாக உதவுகிறது.
பெண்களுக்கு கருப்பையில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற கிளாச்சிக்காய் பயன்படுகிறது. கருப்பையின் ஆரோக்கியம் மேம்படும். இதனைத்தவிர்த்து சீரற்ற மாதவிடாய், மாதவிடாய் கால இரத்தப்போக்கு, கருப்பை புற்றுநோய் பிரச்சனையையும் தடுக்க உதவும்.
செரிமானம் தொடர்பான பிரச்சனையை சரி செய்வதுடன் வயிற்று வலி, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுதலை தரும். வாயுத்தொல்லை, எரிச்சல் சரியாகும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அதேபோல கிருமித்தொற்று, வைரஸ் ஆகியவற்றால் உண்டாகும் உடல் உபாதையை சரி செய்யும். பார்வைத்திறன் மேம்படுத்தப்படும், செவித்திறன் நலம்பெறும். மூட்டு எலும்புகளை பலப்படுத்தும். இதயநோய் ஏற்படாமல் உடல் பாதுகாக்கப்படும். மனஅழுத்தம் குறையும்.