சீரற்ற மாதவிலக்கு உண்டாவதற்கான காரணம் தான் என்ன?…



irregular-period

மாதவிலக்கு காலத்தை பெண்கள் மிகவும் கொடுமையான ஒன்றாக எண்ணுவார்கள். 

மாதவிலக்கு சுழற்சியானது 28- 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் சீராக உள்ளது . மாதவிலக்கு ஏற்படும்போது உடல் அசதி, கால் வலி, தசைவலி உடன் வருகிறதே என வருத்தப்படாதீர்கள். 

மாதவிலக்கு சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். பருவகால மாற்றம் அல்லது வேறு ஏதாவது பிரச்சனையின் காரணமாக ஒரு முறை ஏற்படலாம். ஆனால் தொடர்ந்து சீரற்ற மாதவிலக்கு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. சில உடல்நல பிரச்சனைகளாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இங்கு சீரற்ற மாதவிலக்கு உண்டாவதற்கான காரணம் தான் என்ன?…

Latest tamil news

அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ளுதல்,  கொழுப்பு குறையும் போது ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காது. இதனால் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும்.

தைராய்டு பிரச்சனை மற்றும் மன அழுத்த நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாதவிலக்கு சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும்.
கொழுப்பு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை என்றாலும், அளவுக்கு அதிகமாக கொழுப்பு அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிலக்கு பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

Latest tamil news

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன் அதிகமாகும்போது, அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தை பாதிப்பதால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.

போதுமான அளவு தூங்காமல் இருத்தல், தாமதமாக தூங்குதல், இரவு நேரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சீரற்ற மாதவிலக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  இது தவிர்க்க முடியாதது. இது குறித்து கவலையடைய தேவையில்லை.