உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கும் கேழ்வரகு பக்கோடா.. இன்றே செய்து அசத்துங்கள்..!!

உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கும் கேழ்வரகு பக்கோடா.. இன்றே செய்து அசத்துங்கள்..!!



How to Prepare Kezhvaragu Pakoda

 

உடலுக்கு பல்வேறு நன்மையளிக்கும் ராகியில் பக்கோடா செய்வது எப்படி என்று தற்போது காணலாம்.

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை மாவு - 2 தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று 
பச்சை மிளகாய் - 3 
கேழ்வரகு மாவு - ஒரு கப் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கருவேப்பிலை - ஒரு கொத்து 
உப்பு - தேவைக்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

★முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலையை சேர்த்து அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

★அதில் கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் 

★இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்த ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்தெடுத்தால் ராகி பக்கோடா தயாராகிவிடும்.