உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டியை நீக்க, இதோ சூப்பர் ஐடியா.!

உடலில் ஏற்படும் கொழுப்பு கட்டியை நீக்க, இதோ சூப்பர் ஐடியா.!


how-to-dissolve-body-fat

ஒருவருடைய உடலில்   தேவையற்ற கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து விட்டால், அதன் மூலமாக பல்வேறு நோய்கள்  உண்டாகும். அதில் ஒன்றுதான் உடலில் ஒரு சில இடங்களில் ஏற்படும் கொழுப்பு கட்டி. இந்த கொழுப்பு கட்டிகளை உடனடியாக நீக்குவதற்கான மருந்துகள் இல்லாவிட்டாலும், சில சித்த மருத்துவ முறைகளை நாம் கடைபிடித்தால், இது போன்ற கட்டியை உடனடியாக போக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடற்பயிற்சி :

உணவு சாப்பிட்டவுடன் ஒரு சிலர் ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்திருப்பதாலும், உறங்குவதற்கு ஆயத்தமாகிவிடுவதாலும் அவர்கள் உட்கொண்ட உணவில் இருக்கக்கூடிய கொழுப்பு சத்துக்கள் அவர்களுடைய உடல் திசுக்களில் சேர்ந்து விடும். இப்படிப்பட்ட நபர்களுக்கு கொழுப்பு கட்டிகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. ஆகவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி மற்றும் உடலியக்கத்தை மேற்கொள்வதன் மூலமாக இந்த கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

fatஉண்ணா நோன்பு :

வாரத்திற்கு ஒரு வேளையாவது எந்தவிதமான உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதமிருப்பதன் மூலமாக உடலில் இருக்கக்கூடிய திசுக்கள் மற்றும் ரத்தத்தில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக, கொழுப்பு கட்டிகள் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியும்.

கொடிவேலி தைலம் :

கொடிவேலி தைலம் மிகச்சிறந்த மூலிகைப் பொருளாக கருதப்படுகிறது. இந்த மூலிகையிலிருந்து தயாரிக்கப்பட்ட தைலம் சில சித்த மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். இதனை நம்முடைய உடலில் கொழுப்பு கட்டிகள் இருக்கின்ற பகுதிகளில் தொடர்ந்து தடவி வந்தால், அந்த கட்டிகள் மெல்ல, மெல்ல மறையும் என்று கூறப்படுகிறது.

fatகல்லுப்பு ஒத்தடம் :

நூல் துணி ஒன்றில் சிறிய அளவிலான கல் உப்பை முடிந்து, விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் போன்றவற்றில் அந்த முடிப்பை முக்கி எடுத்து, ஒரு தோசை கல்லில் உடல் தாங்குமளவிற்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகள் இருக்குமிடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால், கொழுப்பு கட்டிகள் கரையும் என்று கூறப்படுகிறது.

ஆரஞ்சு பழம் :

விதையுள்ள ஆரஞ்சு பழத்தில்  பலவிதமான விட்டமின் சத்துக்களும், அமிலத்தன்மையுமிருக்கிறது. இந்த ஆரஞ்சு பழ சுளைகளை நேரம் கிடைக்கும்போது நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால், உடலிலிருக்கும் தேவையற்ற கொழுப்புகள் குறையும். மேலும் கொழுப்பு கட்டிகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.