கண்கட்டியை உடனே சரி செய்ய எளிதான வீட்டு மருந்து குறிப்புகள்! படிச்சு பயன்பெறுங்கள்!How to cure kan katti in tamil

சில வியாதிகள் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் வரும். அதில் ஒன்றுதான் கண்கட்டி. குறிப்பாக வெயில் காலங்களில்தான் அதிக அளவில் கண்கட்டி வரும். இதற்கு முக்கிய காரணாம் வெயிலாக இருந்தாலும், நமது உடலில் இருக்கும் அதிகப்படியான சூடும் இதற்கு முக்கிய காரணமா உள்ளது.

நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் கூட கண்கட்டி வரலாம். இவை கண்ணின் இமை மற்றும் கீழ் பகுதியில் வரும் கட்டி கண்ணில் வலி மற்றும் உறுத்தலை உண்டாக்கும். இதனை போக்க இயற்கையான முறையில் சில தீர்வுகளை பார்ப்போம்.

1 . பாலாடை
பாலாடையை எடுத்து கண்கட்டி உள்ள இடத்தில் தடவ வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கண்களை நன்கு கழுவவேண்டும். இவ்வாறு செய்வதால் கண்கட்டி காணாமல் போகும்.

Health tips in tamil

2 . அகத்திக்கீரை
அகத்திக்கீரை பல்வேறு நன்மைகள் கொண்டது. இதை அரைத்து அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு குறையும். மேலும் அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் முற்றிலும் நீங்கும்.

3 . முருங்கை கீரை
அதிக இரும்பு சத்து உள்ள கீரைகளில் ஓன்று முருங்கை கீரை. முருங்கைக் கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளிப்பதனால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் கண்கட்டி வராமலும் தடுக்க முடியும்.

4 . உருளை கிழங்கு
உருளை கிழங்கு தோளை நன்கு சீவி அதனை கண்களில் படும்படி சில மணி நேரம் வைத்தால் கண்கட்டி கரையும்.