13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
தாம்பத்திய விஷயத்தில் இருக்கும் குறைகளை உணவிலேயே சரி செய்யணுமா? அசத்தல் டிப்ஸ்.!
தாம்பத்திய விஷயத்தில் குறைபாடு என்பது நரம்பு, உடல்நலன், ஹார்மோன், உளவியல் காரணங்களை கொண்டது ஆகும். இந்த பிரச்சனைகளை நாம் உணவுகளின் வாயிலாகவும் சரி செய்யலாம். பாலியல் விவகாரத்தில் பலனை எதிர்பார்ப்போர் அமினோ அமிலம், புரோமிலேன், என்சைம், ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கனை சேர்க்கலாம்.
காய்கறிகள்
நமது உணவில் அவ்வப்போது கேரட், பீட்ரூட், தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், தூதுவளை, பசலைக்கீரை, தாளிக்கீரை ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். இது நல்ல பலன்களை தரும். இவற்றை தினம் ஒரு உணவு எனவும் சுழற்சி முறையில் சாப்பிடலாம்.
பழங்கள்
நேந்திரம் வாழை, செவ்வாழை, அத்தி, பேரீட்சை, மாதுளை, மாம்பழம், பலாப்பழம், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும்.
இதையும் படிங்க: குடல் புண்களுக்கு அருமருந்தாகும் வெந்தயக்கீரை சாதம்; செய்வது எப்படி?.!
விதைகள்
எள்ளு, பூசணி, சோயா பீன்ஸ், வேர்க்கடலை, பட்டர் பீன்ஸ், பாதாம், முந்திரி, பிஸ்தா, கடற்பாசி, சாக்லேட், கருப்பு நிற திராட்சை ஆகியவற்றை நாம் சாப்பிட வேண்டும்.
அசைவம்
வான்கோழி, இறால், நண்டு, முட்டை, பால், சூரை மீன், மாதிசாலை, சிகப்பு நிறம் கொண்ட இறைச்சிகளை நாம் சாப்பிட வேண்டும்.
அரிசி
மாப்பிள்ளை சம்பா, சிவப்பு அரிசி, கறுப்பு கவுனி ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனைத்தவிர்த்து, தண்ணீர் விட்டான் கிழங்கு, பால் மிதப்பன் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு, மதனகாமப்பூ, குங்குமப்பூ போன்றவை நல்ல வலுவை நரம்புகளுக்கு தரும் என்பதால், இவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: இத்துப்போன ஸ்க்ரப்பர்களை பயன்படுத்துறீங்களா? இல்லத்தரசிகளே உங்களுக்குத்தான் இந்த அறிவுரை.!.