அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
இத்துப்போன ஸ்க்ரப்பர்களை பயன்படுத்துறீங்களா? இல்லத்தரசிகளே உங்களுக்குத்தான் இந்த அறிவுரை.!.
வீடுகளில் இன்றளவில் பாத்திரங்களை துலக்க நாம் ஸ்க்ரப்பர்களை பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான ஸ்க்ரப்பர்கள் பாத்திரத்தில் இருக்கும் அழுக்குகளை விரைந்து நீக்க உதவுகிறது. ஆனால், இதே ஸ்க்ரப்பர் நமது உடல்நலனுக்கு மிகப்பெரிய எதிரியாக அமைவது குறித்து உங்களுக்கு தெரியுமா?.
ஆமாம்.. நாம் பயன்படுத்தும் ஸ்க்ரப்பர் மற்றும் ஸ்பான்ச் இடுக்குகளில் கழிவறையை விட அதிக அளவிலான பாக்டீரியா வசிப்பது ஆய்வுகளில் அதிர்ச்சிதரும் உண்மையாக மாறி இருக்கிறது. இவ்வாறான பாக்டீரியா லேசான முதல் கடுமையான குடல் மற்றும் தோல் சார்ந்த நோய்தொற்றுகளையும் ஏற்படுத்துகிறது
இதையும் படிங்க: அடேங்கப்பா.. மீன் இறைச்சி சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.!
1 வாரம் மட்டும் பயன்படுத்துங்க
இதுபோன்ற பிரச்சனையில் இருந்து தவிர்க்க ஸ்க்ரப்பர்களை 1 வாரம் முதல் 2 வாரங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் ஸ்க்ரப்பர்களை சேர்த்து நன்கு கழுவி பின் வெயிலில் உலர வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
உங்களின் ஸ்க்ரப்பர்கள் தேய்ந்து அல்லது லேசான துர்நாற்றம் வீசத்தொடங்கினால், உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். சிறுஅளவிலான அலட்சியமும் உங்களுக்கு உடல் ரீதியான உபாதையை ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் தெரியாமல் நீங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு இவ்வுளவு நன்மைகள் கிடைக்குமா?.!