ஹீமோகுளோபின் குறைகிறதா.? கவலை வேண்டாம்.!! இதோ சூப்பரான ஹோம் ரெமிடி.!!home-remedy-to-increase-hemoglobin-count-in-blood

மனித வாழ்க்கை தற்போது இயந்திரமயமானதாக மாறிவிட்டது. வேலை குடும்பம் பொழுதுபோக்கு என மனிதன் எப்போதும் ஓய்வில்லாமல் உலன்று கொண்டிருக்கிறான். இதுபோன்ற இயந்திரமயமான வாழ்க்கையால் உடலுக்கு பல்வேறு விதமான நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. 40 வயதை தாண்டி அவர்களுக்கு பெரும்பாலும் உடல்நலையானது சோர்வாகவே காணப்படுகிறது. இந்தக் குறையை விரட்டி சரி செய்வதற்கும் நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் வானம் பற்றி இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உலர் திராட்சை 70, ஒரு லிட்டர் தண்ணீர்.

health tips

செய்முறை 

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் உலர் திராட்சைகளை இட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து சுண்டியதும் அடுப்பை அணைத்துவிட்டு மத்தை வைத்து உலர் திராட்சைகளை நன்றாக கடைந்து விட வேண்டும் பின்னர் இந்த பானத்தை நன்றாக வடிகட்டி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 27 நாட்கள் குடித்து வர உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு கிடைப்பதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: பல் வலி பாடாய்ப்படுத்துகிறதா.? எளிதில் நிவாரணம் பெற சில டிப்ஸ்.!!

ஹீமோகுளோபின் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்

நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களில் உள்ள புரதம் தான் ஹீமோகுளோபின் என அழைக்கப்படுகிறது. இந்த சிவப்பணுக்கள் தான் உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது புற்றுநோய் மற்றும் ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஷாக்கிங்... 40 வயதை தாண்டியவரா நீங்கள்.? இந்த புற்றுநோய் உங்களையும் தாக்கலாம்.!!