ஷாக்கிங்... 40 வயதை தாண்டியவரா நீங்கள்.? இந்த புற்றுநோய் உங்களையும் தாக்கலாம்.!!are-you-a-forty-plus-person-this-cancer-may-affect-you

இன்றைய காலகட்டங்களில் மனித சமூகத்திற்கு இருக்கும் மிகப்பெரிய தீமையாக விளங்குவது புற்று நோயாகும். இந்த நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 40 வயதில் தான் வாழ்க்கை தொடங்கும் என்ற ஒரு பழமொழி உண்டு. அதேபோல் 40 வயதை கடந்துவிட்டால் முறையான உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதோடு உடல் நிலையை அடிக்கடி பரிசோதித்துக் கொள்வதும் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 40 வயதிற்கு மேல் பொதுவாக ஆண்களை தாக்கும் சில புற்று நோய்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

புரோஸ்டேட் புற்றுநோய்

40 வயது முதல் 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்களை பொதுவாக தாக்கும் புற்று நோய்களில் முக்கியமானது புரோஸ்டேட் புற்றுநோய். இந்த வகை புற்றுநோய் ஆரம்பத்தில் புரோஸ்டேட் சுரப்பிகளில் தாக்கி மெதுவாக பரவ ஆரம்பிக்கும். இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே ப்ரோஸ்டேட்-ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென் மற்றும் டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனைகளை செய்து புற்றுநோய் இருப்பதை கண்டறியலாம்.

healthy tips

நுரையீரல் புற்றுநோய்

உலகம் முழுவதும் புற்றுநோயால் அதிக மரணம் ஏற்பட காரணமாக அமைவது இந்த வகை புற்று நோயாகும். பொதுவாக புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. புகை பிடிக்காதவர்களுக்கும் சில ரசாயன காரணங்களாலும் அருகில் புகை பிடிப்பவர்களாலும் இந்த வகை புற்று நோய் ஏற்படுகிறது. இந்த புற்றுநோயை கண்டறிவதற்கு லோ-டோஸ் சிடி ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இதையும் படிங்க: பல் வலி பாடாய்ப்படுத்துகிறதா.? எளிதில் நிவாரணம் பெற சில டிப்ஸ்.!!

குடல் புற்றுநோய்

50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை குடல் புற்றுநோய் அதிகமாக தாக்குகிறது. இந்த வகை புற்றுநோய் பெருங்குடல் அல்லது மலக்குடலை பாதிக்கிறது. கொலோநோஸ்கோபி பரிசோதனையின் மூலம் குடல் புற்றுநோயை கண்டறியலாம். இந்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் உயிர்வாழும் விகிதத்தை அதிகரிக்கலாம்.