கத்திரிக்காயை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

கத்திரிக்காயை இப்படி சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!



health-benefits-of-brinjal-ZXC3QM

காய்கறிகளில் வித்தியாசமான நிறம் மற்றும் வடிவமைப்பை கொண்ட சத்துமிக்க காய்கறி என்றால் அது கத்தரிக்காய். கத்திரிக்காய் சிலருக்கு ஒவ்வாமை இருந்தாலும், பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கிறது.

எனவே கத்திரிக்காய் எப்படி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். கத்திரிக்காயை சூப் செய்து சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டால் வாயு தொல்லை குறைகிறது.

Brinjal benefits

அதேபோல் கத்திரிக்காயை வேக வைத்து தேனுடன் கலந்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் இரவு நல்ல தூக்கம் வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கத்திரிக்காயில் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

கத்திரிக்காய் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் கத்திரிக்காய் சாப்பிடுவதால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

Brinjal benefits

கத்திரிக்காயை வறுத்து தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து சாப்பிட்டு வருவதால் இரைப்பை பிரச்சினை, அமிலத்தன்மை மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் சரியாகும். கத்திரிக்காய் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் மற்றும் டீச்சர்கள் மூல நோய்களுக்கு சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.