பெற்றோர்களே உஷார்.. HMPV வைரஸ் டார்கெட் குழந்தைகள் தான்.! மருத்துவர்கள் எச்சரிக்கை.!
சீனாவில் பரவி வந்த எச்எம்பிவி வைரஸ் பரவல், படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு கண்டறியப்பட்ட எச்எம்பிவி, தற்போது மீண்டும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் மக்கள் பலரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் HMPV வைரஸ் மொத்தமாக 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் தலா 2 பேர், குஜராத்தில் ஒருவர், மேற்கு வங்கத்தில் 3 பேர் என மொத்தமாக 8 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு எச்எம்பிவி உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: டெங்குவுக்கு எமனாகும் பாகற்காய்.. ஆனா, சாப்பிடும் முன் இதை மறந்துடாதீங்க.!
அறிகுறிகள்
காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி இருந்தால், மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை போல நுரையீரலை பாதிக்கும் தன்மை கொண்ட எச்எம்பிவி, நோய்க்கு தடுப்பூசி இல்லை எனினும், முதலிலேயே அதனை கண்டறிந்தால் சரி செய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தடுப்பு நடவடிக்கை
மேலும், நோய்ப்பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சானிடைசர் பயன்பாடு போன்றவற்றை மீண்டும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, இருமல், தும்மலில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பெற்றோர் உஷார்
அதேநேரத்தில், இந்நோய் பெரும்பாலும் குழந்தைகள் & இளம் வயதினரை தாக்கும் என்பதால், 2 வயது கீழுள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி இருந்தால், சோதனை செய்துகொள்ளவும். சில குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருக்கும். நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும். முதலியேயே அதனை கண்டறிந்துவிட்டால் சரி செய்துவிடலாம். எந்த விதமான உடல்நலக்குறைவு எனினும், மருத்துவமனையில் சோதனை செய்ய தமிழ்நாடு மற்றும் மத்திய பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.