நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கணுமா... உடனே இந்த ஐந்து செடிகளை வீடுகளில் வளருங்கள்.!

நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கணுமா... உடனே இந்த ஐந்து செடிகளை வீடுகளில் வளருங்கள்.!



do-you-want-to-protect-yourself-from-diseases-bring-the

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு இயற்கையே பல வழிகளை நமக்கு கொடுத்திருக்கிறது. அதனை உணர்ந்து நாம் சரிவர பயன்படுத்தினால் நோயின்றி நல்லா ஆரோக்கியத்துடன் வாழலாம். 

அந்த வகையில் சில செடிகளை நாம் வளர்த்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு  வகிக்கின்றன. மேலும் இந்த செடிகளை நம் வீட்டிற்குள்ளேயே வளர்க்க முடியும் என்பது நமக்கு சௌகரியத்தை கொடுக்கிறது. நமது ஆரோக்கியத்திற்கு பயன்படும் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய ஐந்து செடிகளை பற்றி பார்ப்போம்.

Plantsஆலோவேரா என்று அழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதில் இருக்கக்கூடிய பிசின் சரும பாதுகாப்பிற்கு பயன்படுவதோடு சிறிய தீக்காயங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. மேலும் இதில் இவை செரிமானத்திற்கு உதவுகிறது. வெயில் காலங்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க இவற்றை பயன்படுத்தலாம். உடலின் உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது. இந்தச் செடியை எளிதாக வீட்டிற்குள்ளேயே வளர்க்க முடியும்.

Plantsலாவெண்டர் அதன் இனிமையான நறுமணத்திற்கு பெயர் போன ஒரு செடியாகும். இதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் மன அழுத்தத்தை போக்குவதற்கு உதவுகிறது. மேலும் இதிலிருந்து தேநீர் தயாரித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தச் செடியையும் எளிதாகவே வீட்டில் வளர்க்க முடியும்.  புதினா வகையைச் சேர்ந்த மிளகு கீரை  அஜீரணம் மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. இவை பல சுவாச பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக பயன்படுகின்றன. இந்தச் செடிகளையும் நம் வீட்டில் எளிமையான முறையில் வளர்க்க முடியும். பாம்பு செடி வீட்டில் வளர்க்கக்கூடிய மற்றும் ஒரு செடியாகும். இது காற்றில் இருந்து மாசுக்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. இந்தச் செடியை வளர்ப்பது மிகவும் எளிதானது

எக்கினேசியா, கோன்ஃப்ளவர் என்று அழைக்கப்படும் இந்த செடியானது வீட்டில் வளர்க்கக்கூடிய மற்றொரு மருத்துவ குணங்கள் நிறைந்த செடியாகும். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. மேலும் சுவாசம் மற்றும் சளி தொல்லைகளுக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.