உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்குநாள் உயர்ந்துவரும் பலி எண்ணிக்கை! சீன அரசாங்கம் தெரிவித்த பகீர் தகவல்!

Summary:

corona virus attack increased again


சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை சீனாவில் 11,000 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 உயிரை பறிக்கும் இந்த கொடிய கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் மற்றும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,347 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சீனாவில் 11,000 பேருக்கு மேலானோர் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தினை உருவாக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 


Advertisement