#மகளிர்பக்கம்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான காரணம் என்னென்ன?.. தடுக்க இயலுமா?..! வாங்க பார்க்கலாம்..!!

#மகளிர்பக்கம்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான காரணம் என்னென்ன?.. தடுக்க இயலுமா?..! வாங்க பார்க்கலாம்..!!



Cervical cancer symptoms

 

மனிதனின் உடலில் ரோமம், நகம் தவிர்த்து பிற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும். நம்மால் தவிர்க்க இயலாத புற்றுநோயில் முக்கியமானது கர்ப்பப்பை புற்றுநோய். இந்த நோய்க்கு தடுப்பூசி இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. 

பெண்கள் பருவமடைந்த பின்னரும், கருத்தரிக்கும் சமயத்திலும் கர்ப்பப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் மாற்றத்தினால் இது ஏற்படலாம். தாம்பத்தியத்தில் ஆணிடமிருந்து பெண்ணுக்கு ஹியூமன் பாபிலோனா வைரஸ் மூலமாக இந்த தொற்று ஏற்படலாம். 

அந்த விஷயத்திற்கு பின்னர் அந்தரங்க உறுப்பில் ரத்தக்கசிவு, வெள்ளைப்படுதல் ஏற்படலாம். மாதவிடாயின்போது துர்நாற்றமும் வரலாம். வைரஸ் தொற்று காரணமாக கர்ப்பப்பை வாய் பகுதியில் செல்கள் உற்பத்தியாகும். அவை மறைவதும் கிடையாது. 

Cervical cancer symptoms

பலருடன் அந்த விஷயத்தில் ஈடுபடுவது, இளம்வயதில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது, பிற பாலியல் நோய்கள், நோய் எதிர்ப்பு குறைபாடு புகைப்பழக்கம் போன்றவை கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

எனவே முறையாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் உறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்பை குறைக்கலாம்.