பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன?.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?..! வாங்க பார்க்கலாம்..!!

பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள் என்னென்ன?.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா?..! வாங்க பார்க்கலாம்..!!



Benefits of taking peerkangaai in Food

பீர்க்கங்காயில் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் தொற்று நோய்க்கிருமிகள் தாக்காமல் உடனே காத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சமையலுக்கு சிறந்ததாகும். 

பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின்கள் உடலை பாதுகாக்கிறது. பீர்க்கங்காயில் இருக்கும் வைட்டமின்கள் தோல் நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களை குணப்படுத்துவதில் சிறந்த பங்களிக்கிறது. 

பீர்க்கங்காயை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொல்லை போன்றவை நீங்கும். ரத்த சோகையிலிருந்து விடுபட பீர்க்கங்காய் வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காய் பழங்களும் நன்மை தரக்கூடியது. 

வாந்தியை கட்டுப்படுத்த இது உதவுகிறது. மேலும் மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும், பீர்க்கங்காயை சாற்றை எடுத்து போடுவதன் மூலம் விரைவில் குணமடையும். உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்துவது நல்லது. 

மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாக பயன்படுகிறது. சொறி, சிரங்கு, காய்ச்சல் நாள்பட்ட புண்கள் போன்றவை குணமாக பீர்க்கங்காய் இலை சாற்றை தடவுவது மிகவும் நன்மை அளிக்கும்.