நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டையின் அற்புத நன்மைகள்.!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிரண்டையின் அற்புத நன்மைகள்.!



Benefits of pirandai

நாட்டு மருத்துவத்தில் மிக முக்கியமான மூலிகையாகவும், உணவாகவும் பயன்படுவது பிரண்டை. இது சாதாரண கிராமப்புற காடுகளில் கிடைக்கும் செடி வகையாகும்.

இந்த பிரண்டை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதன்படி பிரண்டையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

health tips

இளம் பிரண்டையை துண்டு துண்டாக நறுக்கி நெய்யில் வதக்கி, அரைத்து தினமும் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். மேலும் அடிபட்டு ஏற்படும் வீக்கத்தில் பிரண்டையை அரைத்து தடவியினால் வீக்கம் குறையும்.

பிரண்டையை துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிரண்டையை நெய் விட்டு வதக்கி, அரைத்து சாப்பிட்டு வர பெருங்குடல் புண் குணமாகும்.

health tips

குறிப்பாக ஆண்கள் பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சியை போக்கி, ஆண்மையை பெருக்குகிறது. மேலும் பிரண்டை துவையல் சாப்பிடுவதால் செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கலை சரி செய்கிறது.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கால வலியை குறைக்க, பிரண்டை சாப்பிடுவது நல்ல பலன் கொடுக்கிறது.