மணத்தக்காளி கீரையின் மகத்துவமான நன்மைகள்.!



benefits-of-manathakkali-keerai

வயல்வெளிகளில் எளிதாக கிடைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை மணத்தக்காளி. இந்த கீரை அதிக ஊட்டச்சத்தும், மருத்துவ குணமும் கொண்டது. 

இந்த மணத்தக்காளி கீரையை குழம்பு, பொரியல், சூப் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். பலவித நன்மைகளைக் கொடுக்கும் மணத்தக்காளி கீரை குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

Manathakkali keerai

மணத்தக்காளி கீரையில் விட்டமின் டி மற்றும் ஈ சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது கொடுக்கிறது.

குறிப்பாக வயிற்றில் புண் ஏற்பட்டால், மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் எளிதில் குணமாகும்.

Manathakkali keerai

மணத்தக்காளி கீரைகள் உள்ள வைட்டமின்கள் கண் பார்வை குறைபாட்டை போக்குகிறது. மேலும் மணத்தக்காளி பழத்தை சாப்பிடுவதால் காசநோய் ஏற்படுவதை தடுக்கிறது.

அதேபோல் குழந்தைகளுக்கு மணத்தக்காளி கீரையில் ரசம் வைத்து கொடுத்து வந்தால் நல்ல ஊட்டச்சத்துடன் வளருவார்கள். மேலும் மணத்தக்காளி இலைகளை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் பிரச்சனைகள் ஏற்படாது.