கடுகு எண்ணெயினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?; அசத்தல் விபரம் இதோ.!

கடுகு எண்ணெயினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?; அசத்தல் விபரம் இதோ.!


Benefits of Kadugu Oil Mustard Oil 

 

வறட்சியின் காரணமாக கால்களில் ஏற்படும் வெடிப்பு போன்றவையும் கடுகு எண்ணெயால் சரி செய்யப்படும்.

வட மாநிலங்களில் சமையல் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு கடுகு எண்ணெய் பிரதானமாக பயன்படுத்தப்படும். தென் மாநிலங்களை பொறுத்தவரையில் தேங்காய் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவையை நம் மக்கள் பயன்படுத்துவார்கள். 

கடுகு எண்ணெயில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் போன்றவை நமது உடலுக்கு பல்வேறு சத்துக்களை வழங்கும். 

இந்த கடுகு எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது. இது சருமத்தினை மேம்படுத்துகிறது. இளமையில் ஏற்படும் வயோதிக தோற்றத்தை தடுக்கும். இதனை முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடு, சுருக்கம் போன்றவையும் மறையும். 

தோல் அமைப்பு மற்றும் தோல் நிறத்தையும் மாற்றும். கடுகு எண்ணெயில் மாய்ஸ்ரைசர் பண்பு இருப்பதால், உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைக்கும். சூரியனிலிருந்து வெளிப்படும் புறவூதா கதிர்களின் காரணமாக ஏற்படும் சரும பாதிப்பையும் தடுக்கும். 

பல பெண்களுக்கு தற்போது முடி உதிர்வு தொடர்பான பிரச்சனை அதிகம் இருக்கும் நிலையில், இதற்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். புரதம், ஒமேகா 3 கொழுப்பு முடி வளர்ச்சிக்கு உதவும். முடி வளருவதற்கு கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை தலையில் தடவி வந்தால் பொடுகு, அரிப்பு பிரச்சனை நீங்கும். 

வறட்சியின் காரணமாக கால்களில் ஏற்படும் வெடிப்பு போன்றவையும் நீங்கும். இதனால் குளிர்காலங்களில் கடுகு எண்ணெயையும் பாதங்களில் பூசலாம். உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புச் சத்துக்களை வெளியேற்றும் தன்மை கொண்ட கடுகு எண்ணெய், வயிற்றில் இருக்கும் கொழுப்புகளை வெளியேற்றும். 

கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் உடலில் இருக்கும் சூடு வெளியேறுவதை உணரலாம். இது உடலில் பல நாட்களாக தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.