நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? இந்த காயை உணவில் சேர்த்தால் போதும்.!Benefits of avarakai

சாதாரணமாக கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கும் அவரைக்காய் ஆயுளை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைக்க தேவையான முக்கியமான சத்துக்களை கொடுக்கிறது. அவரைக்காயில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து, காப்பர், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அந்த வகையில் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும் அவரைக்காயின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

Avarakai

அவரைக்காயில் அதிக அளவில் நார் சத்துக்கள் உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது.

அதேபோல் அவரைக்காயில் உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம் அதிக அளவில் உள்ளதால் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

மேலும் அவரைக்காயில் உள்ள கால்சியம் சத்துக்கள் உடலில் உள்ள பற்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைக்க உதவுகிறது.

Avarakai

அவரைக்காயில் உள்ள இரும்பு சத்து உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சினைகளை போக்க உதவுகிறது.

குறிப்பாக அவரைக்காய் விதைகளை வேகவைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும். மேலும் வயிற்றில் புண் இருந்தாலும் அவற்றை ஆற்ற பயன்படுகிறது.