நரம்பு பிரச்சனைகளுக்கு குட் பை சொல்லுங்க... இதோ உங்களுக்காக அஸ்வகந்தா என்ற அமுக்கராங்கிழங்கு..!



Benefits of Ashwagandha amakura tuber AMUKKARA KIZHANGU Tamil

மூளையில் இருந்து கட்டளையை உறுப்பிற்கு எடுத்து செல்வது நரம்புகள். நரம்புதளர்ச்சி என்பது நரம்புகளின் தளர்வை குறிப்பிடுவது கிடையாது. மயலின் என்று அழைக்கப்படும் வேதிப்பொருளால் சூழப்பட்ட சின்னச்சின்ன நரம்புகள், பெரிய நரம்பாக தசையில் ஊடுருவி இருக்கும். 

இவற்றின் மூலமாக மூளையின் கட்டளைகள் அனைத்தும் உடல் உறுப்புகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இதில் தொய்வு ஏற்படும் பட்சத்தில், அது நரம்புத்தளர்ச்சி என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சனையை அமுக்கராங்கிழங்கு கொண்டு சரி செய்திடலாம். 

AMUKKARA KIZHANGU

காலை மற்றும் மாலை நேரத்தில் காபி, டீக்கு பதில் ஒரு ஸ்பூன் அமுக்கராங்கிழங்கு பொடியில், மூன்று பங்கு அளவில் கற்கண்டு சேர்த்து பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும். 

அமுக்கராங்கிழங்கு அனைத்து வயதினருக்கும் வலுவினை கொடுக்கும். இக்கிழங்கின் பொடியை நெய்யில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலின் பலவீனம் என்பது இல்லாமல் போகும். சருமம் பொலிவடையும். ஆயுள் நீட்டிக்கப்படும். 

வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு 2 சிட்டிகை அளவு நெய்யில் கலந்து அமுக்கராங்கிழங்கு பொடியை கொடுக்கலாம். இதனால் பசியின்மை பிரச்சனை குறையும். பெரியவர்கள் அரை ஸ்பூன் அளவுள்ள அமுக்கராங்கிழங்கு பொடியை நெய்யில் குழைத்து சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் கலந்தும் குடிக்கலாம். 

AMUKKARA KIZHANGU

நமது உடல் ஆரோக்கியத்திற்கு வலுவை கொடுக்கும்கஞ்சி தயாரிக்கும் போது, அமுக்கராங்கிழங்கு பொடியை சேர்த்து குடித்து வந்தால் இழந்த இளமை மீட்டெடுக்கப்படும். அமுக்கராங்கிழங்கு அஸ்வகந்தா என்றும் அழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இது, மன அழுத்தத்தை நீக்கும் அற்புத மூலிகை ஆகும்.