வாழைக்காய் அதிகம் உண்பது உடலுக்கு நல்லதா? அல்லது கெட்டதா?.. வாங்க பார்க்கலாம்..! அதிர்ச்சி உண்மை..!!

வாழைக்காய் அதிகம் உண்பது உடலுக்கு நல்லதா? அல்லது கெட்டதா?.. வாங்க பார்க்கலாம்..! அதிர்ச்சி உண்மை..!!


Banana is good for health or not

 

உடலுக்கு பல்வேறு நன்மைகளையளிக்கும் வாழைக்காய் அதிகம் சாப்பிடுவது நல்லதா? அல்லது கெட்டதா? என்பது குறித்து தற்போது காணலாம்.

வாழைக்காயில் உடலுக்கு நன்மையளிக்கும் பல சத்துக்களும் நிறைந்துள்ளது. உணவில் வாழைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும். குடலை சுத்தப்படுத்தி அதில் உள்ள கொழுப்பு செல்களை அழிக்கிறது. இதனால் உடல் எடை குறையும். பசியை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் வாழைக்காய்க்கு உண்டு என்பதால்,  உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாரம் இருமுறை வாழைக்காய் உண்ணலாம். 

மேலும் வாழைக்காயுடன் சீரகம், மிளகு சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காய் சாப்பிடுவதன் மூலம் வயிறு இரைச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்கள் சரியாகும். வாழைக்காயின் மேற்புறத்தோலை சீவி எடுத்து துவையலாக செய்து சாப்பிடுவது ரத்த விருத்தியளிக்கும். வாழைக்காயில் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் அதிகமாக  இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தந்து, மூட்டு வலியை தடுக்கும்.

health tips

வாழைக்காயில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை உடலுக்கு தேவையான நோய்எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.