இயற்கை உணவு சுவையேற்றி, வணிக அஜினமோட்டோவாக மாறியது எப்படி?.. விபரம் இதோ.! 



Ajinomoto health tips tamil

 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. 

கடந்த சில ஆண்டுகளாகவே உணவின் சுவையை கூட்ட, பொதுவாக நமது ஊர்களில் ரசத்தின் சுவையை அதிகரிக்க அஜினமோட்டோ சேர்ப்பார்கள். அஜினமோட்டோ என்பது சுவையை கூட்டும் உப்பு ஆகும். 

இவை சீன வகை உணவுகளில் பெரும்பாலும் உபயோகம் செய்யப்படும். இதனை குறைந்த அளவு உபயோகம் செய்தால் உணவின் சுவை கூடும் என்பது உண்மை எனினும், அளவு அதிகமானால் முடி உதிர்வு பிரச்சனை கட்டாயம் ஏற்படும். 

கடந்த 1917ம் ஆண்டில் ஜப்பானில் அஜினமோட்டோ உப்பு வடிவில் தயாரிக்கப்பட்டது. Monosodium Glutamate என்ற உப்பு, மருத்துவ உலகில் Slow Killer என அழைக்கப்படுகிறது.  

தொடக்கத்தில் கடல் படுகைகளில் வளரும் பூஞ்சை, பாசியில் இருந்து உப்பு எடுக்கப்பட்டு அஜினமோட்டோ தயாரிக்கப்பட்டது. பின் அமெரிக்க நிறுவனத்தின் வியாபார உக்தியால் செயற்கை அமிலம் கலைக்கப்பட்டது. 

இயற்கையாக கிடைத்த உப்பில் இல்லாத பல்வேறு பிரச்சனை, செயற்கை அமிலத்தை சேர்ந்தபோது ஏற்பட்டுள்ளது. இவை மனிதனை மீண்டும் மீண்டும் அதனை சுவைக்க தூண்டுகிறது. கிட்டத்தட்ட போதைப்பழக்கம் போல அடிமைப்படுத்துகிறது. 

இந்த விஷயத்தின் ஆபத்துகளை உணர்ந்து பின்னாட்களில் அமெரிக்காவில் அஜினமோட்டோ தடை செய்யப்பட்டது. சிறிய அளவிலான துரித உணவக கடைகள் முதல், ஹோட்டல்கள் வரை பலரும் அஜினமோட்டோ பயன்படுத்தி வருகின்றனர். 

தொடக்கத்தில் சீன வகை உணவுகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டது, பின்னாளில் ரசம், சாம்பார் என நமது உணவிலும் கலக்கப்பட்டுவிட்டது. இதனை நாம் சாப்பிடும்போது அதன் சுவை நம்மை அடிமைப்படுத்துகிறது. 

இன்றளவில் விற்பனை செய்யப்படும் சிப்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், பிற இன்ஸ்டன்ட் மசாலா, ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பப்ஸ், சாஸ், டின்னில் வரும் மீன், சிக்கன் போன்றவற்றிலும் அஜினமோட்டோ கலக்கப்படுகிறது.

இதனை உண்பதால் முடி கொட்டுதல், இரத்தத்தின் இன்சுலின் அளவு அதிகரிக்கப்பட்டு அதிக பசி எடுத்தால், இதய நோய் பாதிப்பு போன்றவை ஏற்படும். கர்ப்பிணி, குழந்தைகளுக்கு அஜினமோட்டோ தீராத தலைவலி பிரச்சனையும் ஏற்படுத்தும்.

நரம்பு மண்டலத்தை அதீத உற்சாகப்படுத்தி பலவீனப்படுத்தும். இதய நோய், இதய வலி ஏற்படுத்தும். முகத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படும். இரத்த கொதிப்பு, நீரிழிவு நோய், ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை, அதீத வியர்வை, கண்களில் குறைபாடு, புற்றுநோய் பிரச்சனையும் உண்டாகும். 

இயற்கையாக தயாரிக்கப்படும் அஜினமோட்டோவில் எந்த பிரச்சனையும் இல்லை. எனினும் அதன் பெயரால் இன்றளவில் விற்பனை செய்யப்படும் ரசாயனத்தை உணவில் சேர்த்தால் கேடு நமக்கே. குழந்தைகள் நூடுல்ஸ் மசாலா சுவைக்கு எப்படி அடிமையாகிறார்கள் என்ற உண்மை தற்போது பலருக்கும் புரியவந்திருக்கும். 

1920ல் 20 டன் தேவையாக இருந்த அஜினமோட்டோ, தற்போது 12 இலட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. வணிக ரீதியாக 140 க்கும் மேற்பட்ட நாடுகளில் அஜினமோட்டோ உபயோகம் செய்யப்படுகிறது. ஆய்வாளர்களும் மக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளனர்.