இதுவரையும் யாரும் தராத தொகையை கேரள மக்களுக்கு வழங்கிய ஒரு உயர்ந்த மானிடர் யார் தெரியுமா?



great human being


கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஷாம்ஷீர் வயாலில் அபுதாபி தலைமையகத்திலுள்ள சுகாதார பராமரிப்பு அலுவலகத்தின் தலைவராக உள்ளார்.இவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்ரூபாய் 50 கோடி  கொடுத்துள்ளார்.

flood

 கேரள மக்களுக்கு ஒரு தனிநபர் வழங்கிய அதிகப்பட்ச தொகை இதுவாகத்தான் இருக்கும்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் கன மழை காரணமாக தற்போது கேரளா மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. 

 இந்த கனமழை காரணமாக ஏராளமானோர் தங்கள்  வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த  50 கோடி ரூபாய் நிதியுதவி மூலம் தங்கள்  வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு  வீடு கட்டித் தருவது, மருத்துவமனைகள் மற்றும் மாணவர்களின் படிப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்


 


.