நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
மக்களே உஷார்! தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாளை (ஜூலை 17) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 18ஆம் தேதி கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை மின்னல் சாமர்த்தியத்துடன் கனமழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனுடன், ஜூலை 20ஆம் தேதி தென்காசி, ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பயண திட்டங்களை கவனமாக திட்டமிட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை!! தென்றலுடன் உருவான வானிலையால் லேசாக குளிர்ந்த சென்னை!
இதையும் படிங்க: கணவர் இறந்த துக்கதில் அடுத்த நொடியே மயங்கி விழுந்து மனைவி! இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்...