ஏன் இப்படி திட்டுறீங்க! வேதனையோடு அர்ச்சனா மகள் வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

ஏன் இப்படி திட்டுறீங்க! வேதனையோடு அர்ச்சனா மகள் வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


zara-tweet-about-netizans-who-scold-them

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அர்ச்சனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் ஒன்றாக விஜய் டிவியில் தாயில்லாமல் நானில்லை என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த ப்ரமோ வீடியோ வெளியான நிலையில் பலரும் நெகட்டிவாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாரா இதுகுறித்து மிகவும் வேதனையுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,இது எங்களை வெறுப்பவர்களுக்கான குறிப்பு. ஒரு டிவி நிகழ்ச்சி வீடியோவில் கமெண்ட்ஸில் ஏராளமான வெறுப்புணர்ச்சிமிக்க வார்த்தைகளை பெற்றுள்ளோம். இவ்வளவு மோசமான வார்த்தைகளால் எங்களை பெண்கள்தான் அதிகம் திட்டியுள்ளனர்.  எங்க குடும்பம் அன்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும். அன்பை மட்டுமே அனைவருக்கும் கொடுக்கும். எங்களை பிடிக்கவில்லையா,அதை உங்களுடனேயே வைத்துக்கொள்ளுவேன்.

உங்களது கருத்து எங்களை கடுமையாக பாதிக்கிறது. வெறுப்பவர்களை எண்டர்டெயின்மெண்ட் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை என பதிவிட்டுள்ளார். மேலும் அர்ச்சனா நாங்கள் பொதுவெளியில் பிரபலங்களே தவிர, பொதுச்சொத்துக்கள் இல்லை என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.