புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பாட்டிக்கு தூக்கமாத்திரை கொடுத்து.. வாலிபர் செய்த மோசமான காரியம்.! வீடு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கர்நாடக மாநிலம் நாகமங்களா பகுதியில் வசித்து வருபவர் யூசுப். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த மாணவிக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து வீடியோ காலில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியின் சில அந்தரங்க வீடியோக்களையும் அவர் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
அதனை வைத்து யூசுப் மாணவியை மிரட்டி தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர், அவரை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்கு சென்றுள்ளனர். இதனை தெரிந்துகொண்ட யூசுப் அங்கு சென்று மாணவியின் உதவியோடு அவரது பாட்டிக்கு உணவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் ஊரிலிருந்து வீடு திரும்பிய பெற்றோருக்கு மகள் நடந்துகொள்ளும் விதத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்பு அவரிடம் விசாரித்துள்ளனர். மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் யூசுப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் யூசுப்பை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.