இந்தியா சினிமா

கொரோனா நேரத்தில் இளம் வயதில் மரணமடைந்த பிரபல நடிகர்.!

Summary:

young actor died

தி பிளாஷ் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலமாகப் புகழ்பெற்ற கனடாவைச் சேர்ந்த 16 வயது நடிகர் லோகன் வில்லியம்ஸ் மரணமடைந்துள்ளார். நடிகர் லோகனின் தாய் மர்லிஸ் வில்லியம்ஸ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

லோகனின் மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. திறமை மற்றும் அழகான தோற்றத்தினால் பெரிய நடிகராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன என்று தனது வருத்தத்தை நடிகர் லோகனின் தாய் மர்லிஸ் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,நடிகர் லோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இறுதிச்சடங்குகளுக்கும் கூட சிரமமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

16 வயதில் ஒரு நடிகர் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடையவைத்துள்ளது. லோகனுடன் நடித்த பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்கள்.


Advertisement