யோகி பாபு வசூல் மன்னராக மாறிடுவாரோ; தர்ம பிரபுவை வாங்க கடும் போட்டி.!

யோகி பாபு வசூல் மன்னராக மாறிடுவாரோ; தர்ம பிரபுவை வாங்க கடும் போட்டி.!



yoki pabu - therma prabhu - new tamil movie

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

Yoki babu

இந்நிலையில், தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாகியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது பல தயாரிப்பாளர்கள் யோகி பாபுவை தங்கள் படங்களில் ஹீரோவாக நடிக்க வைக்க தொடங்கியுள்ளனர். அவர் ஹீரோவாக நடித்துள்ள ‘தர்ம பிரபு’ படத்தின் ஏரியா உரிமத்தை வாங்க பல விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.