சினிமா

அவரா.. இருக்காது! சிறுமி பாலியல் வழக்கில் கைதான பிரபல நடிகர்! ஆதரவாக குரலெழுப்பிய நடிகை யாஷிகா!!

Summary:

பாலிவுட்டில் ஏராளமான டிவி தொடர்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் பேர்ல் வி பூரி. இவர் 2

பாலிவுட்டில் ஏராளமான டிவி தொடர்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் பேர்ல் வி பூரி. இவர் 2013 ஆம் ஆண்டில் தில் கி நாசர் சே கூப்சுரத் என்ற தொடரில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார். மேலும் அவர் நாகின் 3 தொடரில் நடித்ததை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

இந்த நிலையில் பேர்ல் வி பூரி 17 வயது சிறுமி ஒருவரை ஐந்து நபருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிடபட்டுள்ளது. இந்த நிலையில் பேர்ல் வி பூரிக்கு ஆதரவாக பிரபலங்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து நாகின் 3 தொடரில் நடித்த நடிகை அனிதா ஹசானந்தனி, பேர்ல் வி பூரியை எனக்கு நன்றாக தெரியும். இது உண்மையல்ல. எல்லாம் பொய்கள். விரைவில் உண்மை வெளிவரும் என கூறியுள்ளார். மேலும் நடிகை யாஷிகாவும் அவருக்கு ஆதரவாக, எனக்கு தெரிந்த அன்பானவர்களில் பேர்ல் வி பூரியும் ஒருவர். நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன். என் நண்பர் திரும்பி வந்துவிடுவார் என நம்புகிறேன். பாசிட்டிவாக இருப்போம் என் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement