வாவ்.. நடிகர் துல்கர் சல்மானின் மகளா இது.! நல்லா வளர்ந்துட்டாரே!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!!



Dulquar salman daughter photo viral

மலையாள சினிமாவில் இளம் நடிகராக வலம் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் மம்முட்டியின் மகன் ஆவார். துல்கர் சல்மான் சினிமா துறையில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த செகண்ட் ஷோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகரானார். இவர் நடித்து தமிழில் டப் செய்யப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதாராமம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம ரீச்சாகி சூப்பர் ஹிட் ஆனது.

இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வரும் துல்கர் சல்மான் 2011-ம் ஆண்டு அமல் சூபியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மரியம் என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் துல்கர் சல்மான் அண்மையில் தனது மகளின் 7வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்து கூறி துல்கர் வெளியிட்ட அவரது மகளின் கியூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் துல்கர் சல்மானின் மகள் நன்கு வளர்ந்துவிட்டார் என கூறி வருகின்றனர்.