எனக்கு விஜய்யிடம் அந்த விஷயம்தான் சுத்தமாக புடிக்காது.! ஓபனாக போட்டுடைத்த நடிகை திரிஷா!!actress-trisha-talk-about-vijay-silence

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு அவர் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் நடிகை திரிஷா விஜய்க்கு ஜோடியாக அசத்தலாக நடித்திருந்தார்.

விஜய்யுடன் இணைந்த படங்கள் 

இதற்கு முன்பு விஜய் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி  போன்ற படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தரணி இயக்கத்தில் அவர்கள் நடித்திருந்த கில்லி திரைப்படம் அண்மையில் ரீ-ரிலீஸாகி மீண்டும் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிசில் வசூலையும் அள்ளியது.இந்த நிலையில் தற்போது திரிஷாவின் பழைய நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

vijay​​​​​​

பிடிக்காத விஷயம் 

அதில் அவர் விஜய் பற்றி கூறியதாவது, 
ஷூட்டிங்கின் இடைவேளையில் விஜய் பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார், யாரிடமும் பேச மாட்டார். ஷுட்டிங் முடிந்தவுடன் ஒரு சேரை எடுத்து சுவருக்கு பக்கத்தில் போட்டு அமர்ந்துகொண்டு அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.சில சமயங்களில் அவர் அமைதியாக இருப்பது ஏதோ நாம் தவறு செய்துவிட்டோமோ என கூட தோண வைக்கும், அவரது அந்த அமைதி எனக்கு சுத்தமா பிடிக்காது என ஓபனாக கூறியுள்ளார்.  அது வைரலாகி வருகிறது.