13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
மகள்களை சீரழிக்க வந்த கயவனை கொன்று, மரத்தில் தொங்கவிட்ட தாய்; பதறவைக்கும் சம்பவம்.!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரதாப்பூர் பகுதியில் வசித்து வரும் பெண்மணி பாக்மான் கர்வாலா (வயது 52). இவரின் சகோதரர் கஹிரு (வயது 50).
பாக்மானின் கணவர் இறந்துவிட்ட காரணத்தால், பெண்மணி தனது 2 பதின்ம வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இருவருக்கும் 14 மற்றும் 16 வயது ஆகிறது. இவர்களின் வீட்டருகே பாக்மானின் சகோதரர் குடியிருக்கிறார்.
அக்கம்-பக்கத்து தகராறில் சிறுமிகளிடம் அத்துமீற முயற்சி:
இருவரும் வசித்து வரும் வீட்டருகே இருக்கும் சஞ்சய்க்கும் - கணவரின் இன்றி வசித்து வந்த பெண்ணுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவில் பெண்ணின் வீட்டிற்குள் சஞ்சய் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அங்கு அவரின் 2 மகள்களில் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், சிறுமியை மீட்டனர். மேலும், சஞ்சயை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
பாசத்தால் படுகொலை செய்து கொலை வழக்கில் சிக்கிய குடும்பம்:
இந்த சம்பவத்தில் சஞ்சய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட, அவரின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சஞ்சயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்மணி, அவரின் சகோதரர், பெண்மணியின் 2 மகள்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.