14 வயது சிறுமியிடம் இருவர் கும்பல் பலமுறை அத்துமீறல்; இன்ஸ்டா பழக்கத்தால் நடந்த சோகம்.!maharashtra-palghar-minor-gang-raped-by-2-man

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம், தலைசரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். 

இன்ஸ்டாகிராம் பழக்கம்:

சிறுமியிடம் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய 2 இளைஞர்கள், இன்ஸ்டாகிராம் செயலியில் நட்பை ஏற்படுத்தி பழகி இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் 30 ம் தேதி நேரில் சந்திக்கலாம் என்றும் வீட்டிற்கு அழைத்துள்ளனர்.

கூட்டுப்பாலியல் வன்கொடுமை:

வீபரீதம் புரியாத சிறுமியும் அவர்களுடன் வீட்டிற்கு செல்ல, அங்கு சிறுமி இருவர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மே 4 ம் தேதி வரை இத்துயரம் நடந்துள்ளது. 

போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது:

பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.