எல்லாம் போதும்.. இனி அதை மட்டும் செய்யமாட்டேன்! யாஷிகா எடுத்த அதிரடி முடிவு! ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா. அதனைத் தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து நடிகை யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டார்.
பின்னர் ஏராளமான படங்களில் கமிட்டான அவர் சில மாதங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா தற்போது குணமடைந்து மீண்டுள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வபோது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பார். இந்நிலையில் அண்மையில் ரசிகர் ஒருவர் யாஷிகா வைத்திருந்த ராயல் என்ஃபீல்டு பைக் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், பைக்கை தனது சகோதரரிடம் கொடுத்துவிட்டதாகவும், மேலும் உடலில் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளதால் இனி பைக் மற்றும் கார் ஓட்டகூடாது என முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.