போண்டா சாப்பிட பெண் தொண்டைக்குள் போண்டா சிக்கி மரணம்.! அதிர்ச்சி தகவல்!
போண்டா சாப்பிட பெண் தொண்டைக்குள் போண்டா சிக்கி மரணம்.! அதிர்ச்சி தகவல்!

சென்னை சூளைமேடு காமராஜ் நகரில் வசித்து வருபவர் கங்காதரன். இருசக்கர வாகனங்களுக்கு உதிரி பாகம் விற்பனை செய்துவரும் கடையில் வேலைபார்த்துவரும் இவரது மனைவி பெயர் பத்மாவதி. கங்காதரன் - பத்மாவதி இருவர்க்கும் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
இந்நிலையில் தனது தாயாருடன் அவரது வீட்டில் வசித்துவந்துள்ளார் பத்மாவதி. நேற்று மாலை வெளியே சென்ற பத்மாவதியும், அவரது தாயாரும் வீட்டிற்கு திரும்பும்போது சாப்பிடுவதற்காக போண்டா வாங்கியுள்ளனர். போண்டாவுடன் வீட்டிற்கு வந்த பத்மாவதி போண்டாவை எடுத்து சாப்பிட தொடங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் பத்மாவதி சாப்பிட போண்டா திடீரென அவரது தொண்டையில் சிக்கி கொண்டது. சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு பத்மாவதி மயங்கியுள்ளார். பத்மாவதியின் தொண்டைக்குள் அவரது தாயார் தண்ணீர் ஊற்ற, தண்ணீரும் உள்ளே செல்லவில்லை.
உடனே, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் பத்மாவதியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பத்மாவதியை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். போண்டா தொண்டையில் சிக்கிக்கொண்டு பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு புதுச்சேரியை சேந்த புருஷோத்தம்மன் என்பவர் பரோட்டா சாப்பிடும்போது பரோட்டா தொண்டையில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.