தமிழகம் சினிமா

எஸ்.பி.பி உயிரிழக்க இதுதான் முக்கிய காரணம்! சிகிச்சை வழங்கிய மருத்துவமனை முதல் முறையாக விளக்கம்.

Summary:

what is the reason for spb death hospital administration explains

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் மரணத்திற்கு அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவே காரணம் என அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தாலும், சில நாட்களில் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இன்னிலையில் அவருக்கு பல்வேறு உயர்தர சிகிச்சை வழங்கப்படும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களை அவருக்கு சிகிச்சை வழங்கிய எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளது. 

எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எக்மோ மற்றும் தொடர் செயற்கை சுவாசம் கொடுத்ததால் கடுமையாக தொற்று ஏற்பட்டதாகவும், அதனால் அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவே அவரது மரணத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement