இந்தியா சினிமா

இளம் பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மலைபோல் குவிந்து கிடந்த?

Summary:

West bengal girl eat 1 point 5 kg ornaments and gold coins

சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை அவரது பெற்றோர் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வயிற்றுவலியின் காரணத்தை தெரிந்துகொள்ள வயிற்றை ஸ்கேன் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதனை அடுத்து அந்த இளம் பெண்ணின் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்தபோது உள்ளே இருந்ததை பார்த்து மருத்துவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கு காரணம், சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள ஆபரணங்கள் மற்றும் தங்க காய்ன்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோரிடம் கேட்டபோது தங்கள் மகன் நகை கடை வைத்திருப்பதாகவும் இவரை அங்கு அழைத்துச்செல்லும்போது யாருக்கும் தெரியாமல் அவர் இதனை விழுங்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஆபரண நகைகள் மற்றும் ஒருசில தங்க காசுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இதன் எடை சுமார் ஒன்றரை கிலோ ஆகும்.


Advertisement